Saturday, 20 April 2019

அன்புடன் அந்தரங்கம்-20110403


அன்புடன் அந்தரங்கம்

பதிவு செய்த நாள் - 03.04.2011.

அன்புள்ள அம்மாவுக்கு -

            எனக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. என் திருமணம், காதல் திருமணம் என்பதால், இதுவரை, என் வீட்டில் என்னை ஏற்கவில்லை. என்றாலும், அந்த குறை தெரியாது, என் கணவர் பார்த்துக் கொள்கிறார். எனக்கு, ஒரு வயதில், பெண் குழந்தை உண்டு. என் மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக எண்ணி, அவர்களை அப்படித்தான் கூப்பிடுவேன்.

            என் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. என் கணவர் பணி நிமித்தம்,, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தான் இரவில் வீட்டில் இருப்பார். அவர், வீட்டில் இல்லாத நேரத்தில், தனியாக இருக்க வேண்டாம் என்று, என் அத்தையும், மாமாவும் என் அறையில் தான் படுத்துக் கொள்வர்.

            ஒரு மாதத்திற்கு முன், என் அத்தை வெளியூர் சென்றிருந்தார்; என் கணவரும், வேலைக்கு சென்று விட்டார். அன்று, என் கணவரின் அண்ணன், அண்ணி மற்றும் என் மாமனார் வீட்டில் இருந்தனர். வீட்டின் முன் அறையில், வழக்கம் போல், என் மாமனார் படுத்துக் கொண்டார். அடுத்த அறையில், என் கணவரின் அண்ணனும், அண்ணியும் படுத்திருந்தனர்.

            இரவு, திடீர் என்று என் மாமனார், என்னிடம், தப்பான எண்ணத்துடன், பக்கத்தில் வந்து படுத்தார். அந்த இரவில் என்ன செய்வது என்று தெரியாமல், அவரை திட்டிவிட்டு, படுத்துக் கொண்டேன். என் மகளுக்கு பால் கொடுக்கும் போது, நான் தூங்கி விட்டால், வந்து பார்ப்பாரோ என்ற பயத்தால், இரவு முழுக்க எனக்கு தூக்கம் வரவில்லை.

            விடிந்ததும், இரவு நடந்ததை, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். பின், என் கணவரின் அண்ணியிடமும், என் கணவரிடமும் கூறினேன். "எதுவாக இருந்தாலும், நான் வீட்டுக்கு வந்தவுடன் பேசிக் கொள்ளலாம்....' என்று கூறி விட்டார் என் கணவர்.

            ஆனால், என் கணவரின் அண்ணன், என் மாமனார் வீட்டுக்கு வந்தவுடன், அவரை திட்டி, அடிக்கச் சென்று விட்டார்.

            உடனே அவரிடம், நான்தான் அவரின் அருகில் சென்று, தப்பான எண்ணத்துடன் படுத்ததாக கூறினார் என் மாமனார்; அதையே, என்னிடமும் கூறினார். அதை கேட்டவுடன், எனக்கு கோபம் வந்து, அவரை அடித்து விட்டேன்.

            என் குடும்பம், கூட்டுக் குடும்பம் என்பதால், அவரும், நானும், ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும். எனக்கு அவர் முகத்தை பார்க்கும் போதெல்லாம், அந்த இரவு நடந்தது தான், நினைவுக்கு வருகிறது.

            மற்றவர்களும், என் கணவரும், "நடந்ததை மறந்து விடு; அவரை மன்னித்து விடு...' என்று கூறுகின்றனர்; என்னால், அது முடியவில்லை. என் கணவரிடம், "நாம் தனிக்குடித்தனம் சென்று விடலாம்...' என்று கூறுகிறேன்.

            நான் என்ன முடிவை எடுப்பது என்று நீங்களே கூறுங்கள்.

 - இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு -

            உன் கணவர், இரவுப் பணிக்கு போகும் போதெல்லாம், உனக்கு துணையாக, மாமானரும், மாமியாரும், உன் அறையில் படுத்திருக்கின்றனர். நள்ளிரவில் இயற்கை உபாதையை கழிக்க எழும் உன் மாமனார், குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, ஜாக்கெட் பட்டன் போடாமல், படுத்திருக்கும் உன்னை, பார்த்திருக்கக் கூடும்.

            தவிர, நிறைய பெண்கள் தூங்கும் போது, சிறிதும் லஜ்ஜை இன்றி, அலங்கோலமாய் படுத்திருப்பர். நிறைய வீடுகளில் அம்மாக்கள், பெண்கள் தூங்கும் போது, வலப்பக்கம் ஒருக்களித்து படுக்க சொல்லித் தருவதில்லை. விளைவு, பரிசோதனைக் கூடங்களில், ஆணியடிக்கப்பட்டு, மல்லாக்க கிடக்கும் தவளைகள் போல் கிடக்கின்றனர்.

            உன்னுடைய அலங்கோல காட்சிகளை, பல நாள் பார்த்து, மனம் திரிந்து போய் இருந்திருக்கிறார் உன் மாமனார். பொதுவாக, மாமனார்கள், 65 - 70 வயதில் இருப்பர்; உன் மாமனாருக்கு, 55 வயது இருக்கும். இந்த மாதிரியான கிழங்கள் ஆபத்தானவை. இவற்றை, பாம்பு என்று ஒதுங்கவும் முடியாது; பழுது என்று மிதிக்கவும் முடியாது.

            உன் துணைக்கு, மாமியார் மட்டும் படுத்திருக்க வேண்டும். கிழம் தனியாக படுக்காமல், மனைவியுடன் ஜோடி சேர்ந்து படுத்திருக்கிறது. பார்க்க கூடாத காட்சிகளை பார்த்து, சூடேறியிருக்கிறது. பகல்களில் கூட கிழம், நீ ஆடை மாற்றுவதை, குளிப்பதை அகஸ்மாத்தாய் நோட்டமிடும் போல...

            நீ தான் விரும்பி, அவரிடம் போய் படுத்துக் கொண்டாய் என்ற மாமனாரின் அக்மார்க் பொய்யை, கணவனும், கணவன் வீட்டாரும் நம்பியிருந்தால் உன் கதி?

            உன் மாமனாரின் கடந்த கால திருவிளையாடல்கள், அவர்களுக்கு தெரியும் போல; அதனால் தான், அவர்கள் அந்த கிழத்தை நம்பவில்லை.
            நீ, அந்த கிழநரியை அடித்தது, தப்பே இல்லை. ஒரு அடியுடன் நில்லாது, அவரை துவைத்து எடுத்திருக்க வேண்டும்.

            அடிபட்ட பாம்பு, உன் மாமனார். உன்னை பழிவாங்க, தக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். சாத்தானின் நாள் ஒன்று வரும். உன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பார்; மறுப்பாய். உன் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்ப்பார் அல்லது நீ கையில் கிடைத்ததை வைத்து, சாத்தி, அவருக்கு மரணக்காயம் ஏற்பட வைப்பாய். இந்த முட்டல், மோதலில் உன் கைக்குழந்தையும், சிக்கலாம்.

            இதை, உன் கணவரிடமும், மாமியாரிடமும் விளக்கு. "எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலிருக்க, தனிக்குடித்தனம் போக அனுமதியுங்கள்...' என, இறைஞ்சு.

            தனிக் குடித்தனத்துக்கு ஒரேயடியாக மறுத்தால், கீழ்க்கண்ட நிபந்தனைகளை விதித்து, கணவனின் கூட்டுக் குடும்பத்தில் தங்கு - 

* உன் கணவரின் இரவுப் பணியை, பகல் பணியாக மாற்றி, வாங்கச் சொல்.

* உன் மாமனாரின் ஜாகையை, எதாவது ஒரு உறவினர் வீட்டுக்கு மாற்றச் சொல். ஒரு வருடத்திற்கான, தற்காலிக ஏற்பாடு இது.

* பாத்ரூம் அட்டாச்டு அறையை, கேட்டு வாங்கு. தூங்கும்போது, கதவை உட்புறமாக பூட்டு.

* மாமனாரின் நடத்தையிலோ, பார்வையிலோ மாற்றம் இல்லாவிட்டால், "மாமா என்றோ, அப்பா என்றோ கூப்பிட மாட்டேன்; "குப்பைத்தொட்டி' என்றுதான் கூப்பிடுவேன்...' என்று சொல்.

* முத்தாய்ப்பாக, "நள்ளிரவில் மீண்டும் தொந்தரவு செய்தால், திட்ட மாட்டேன், அறைய மாட்டேன், இரும்புக் கம்பியை வைத்து, மாமனாரின் தலையில், ஒரே போடாக போட்டு விடுவேன். விளைவுகளுக்கு, நீங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்...' என்று கூறு.

 எல்லாவற்றுக்கும் மேலாக, உன் பிறந்த வீட்டுக்கு வெள்ளைக் கொடி காட்டி, அவர்களுடன் சேரப் பார். அவர்கள் வந்துவிட்டால், உனக்கு அசுர பலம்தான்.

அன்புடன் அந்தரங்கம்-20120610


அன்புடன் அந்தரங்கம்

பதிவு செய்த நாள் - 10.06.2012.

அன்புள்ள சகோதரிக்கு -

          எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திருமணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமதமாகவே நடந்தது. மனைவி, தற்போது கர்ப்பிணியாக உள்ளாள்.

          நான் திருமணம் செய்தது, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில். மனைவியின் தாயார், எங்களுக்கு தூரத்து உறவினர்; எனக்கு சகோதரி முறையும் கூட. அவர் தன்னுடைய, 15வது வயதில், 35 வயதுள்ளவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னுடைய மாமனார், மும்பையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் சம்பளம், அவருடைய செலவு மற்றும் அவரது மருந்து, மாத்திரைக்குத்தான் சரியாக இருக்கும்.

          ஒரு வாரம் வீட்டில் இருப்பார்; பிறகு மும்பை செல்வார். என் மனைவி பூக்கடை ஒன்றில், வேலை செய்து வருவதால், அந்த வருமானத்தில்தான் தாய், மகளின் காலம் ஓடிக்கொண்டிருந்தது.

          நானும் திருமணத்திற்கு பின், மாமனார் வீட்டிலேயே தங்கி@னன். வீட்டில் ஒரே பெண்தான். வேறு துணைக்கு ஆள் இல்லாததால், என்னை வீட்டோடு மருமகனாக்கிக் கொண்டனர். நான், இரவு பணிமுடித்து அதிகாலை, 4.00 மணிக்குதான் வருவேன். மனைவி காலை, பணிக்கு சென்று, இரவு 7.00 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள்.

          மனைவி சென்ற பின், நான் தூங்க ஆரம்பிப்பேன். இதில் என்ன விஷயம் என்றால், பகலில் பெரும்பாலான நேரங்கள், வீட்டில் நான் மாமியாரோடு தான் இருக்கிறேன். ஆனால், அதிகம் பேச மாட்டார்; கூச்ச சுபாவம் உள்ளவர்.

          அவருக்கு, என்னை விட, ஓரிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். ஒரு நாள் மதியம், 2.00 மணி இருக்கும். அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டியிருந்தது, எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு, திரும்பி வரும்போது, எதேச்சையாக அவரது ரூமை பார்த்தேன். அப்போது தான் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தார் போல. "பிரா'வுடன் இருந்தார்.

          சற்று நேரம் தடுமாறி, அங்கேயே நின்று விட்டேன். லேசாக திரும்பும்போது, என்னை கவனித்து விட்டார். வெட்கத்தால் முகம் சிவந்து, சற்றே கோபத்துடன் அவசரமாக, துணியால் மார்பை மூடிக் கொண்டார்.

          எனக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வழியாக யோசித்து, "சாரி' சொல்லிவிட்டு, செல்லலாம் என நினைத்து அருகில் சென்றேன். அருகில் சென்றதும், என்னையே, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நரம்புகள் முறுக்கேறி, ஏதோ செய்ய, திடீரென்று கட்டிப்பிடித்து விட்டேன். ஒரு பக்கம் திமிற, என்னுடைய பிடி இறுக, ஒரு யுத்தமே நடந்தது. முடிவில் மிகவும் பலாத்காரமாக, அவருடன் உறவு கொண்டு விட்டேன்.

          அந்த சம்பவத்திற்கு பின், நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.

          மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. பேசாமல், மனைவியை தனியே அழைத்து சென்று விடலாமா என நினைத்தேன். 15 நாள் ஆகியிருக்கும், நானே மாமியாரிடம் பேசினேன். "தப்பு செய்து விட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள். இதற்குமேல், நான் உங்கள் வீட்டில் இருப்பது சரி இல்லை. அதனால் நான், மனைவியை அழைத்துக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்று விடுகிறேன்...' என்றேன். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார்.

          "தவறை நீங்கள் மட்டும் செய்யவில்லை. இருவருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அதனால், நீங்கள் மட்டும் கவலைப்படத் தேவையில்லை. சம்பவம் யாருக்கும் தெரியலையே. நமக்குள்ளேதான் இருக்கிறது. அதனால், வருத்தப்பட வேண்டியதில்லை...' என்றார்.

          எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பிறகு ஒரு நாள் அவரே, என்னை உறவுக்கு அழைத்தார். என்னால் மீறவும் முடியவில்லை; மறுக்கவும் முடியவில்லை; உடன்பட்டேன். இப்படியாக எங்கள் உறவு, நான்கு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பகல்பொழுதில், கணவன், மனைவியாகவே இருக்கிறோம். அதிகாலையில், ஒரு சில மணிகளே, மனைவிக்கு இன்பத்தை கொடுத்துவிட்டு, பகல்பொழுதில் மாமியாருக்கு கணவராக, எத்தனை நாள்தான் இருக்க முடியும்?

          அவரிடம் கேட்டால், "இப்படியே இருக்கட்டுமே; யாருக்கும் தெரிந்தால்தானே அசிங்கம். தெரியாமல் பார்த்துக் கொள்வோம்...' என்கிறார். "நீங்களும், மகளும் தனியே சென்று விட்டால், தற்கொலை செய்து கொள்வேன்...' என, மிரட்டுகிறார். இந்த பிரச்னையிலிருந்து, நான் எப்படி மீள்வது. மனைவியிடம் உண்மையை சொல்லி விடலாமா அல்லது மாமனாரையும் அழைத்து, வீட்டோடு வைத்துக் கொள்ளலாமா?

          சகோதரியாகிய நீங்கள்தான், இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்.

 - இப்படிக்கு
உங்கள் சகோதரன்.


அன்புள்ள சகோதரருக்கு -

          உங்கள் கடிதத்தை வாசித்தேன். திருமணத்தின் போது, உங்களுக்கு வயது, உங்களது மனைவி வயதை விட, 14 வயது அதிகம். உங்கள் மாமனாரின் வயதோ, உங்களின் மாமியார் வயதை விட, 20 வயது அதிகம்.

          பொதுவாக திருமணங்களில், ஆணின் வயது பெண்ணின் வயதைவிட, 3லிருந்து, 5 வரை அதிகமிருக்கும். சமவயதினர் கூட மணம் செய்து கொள்கின்றனர். சில சமயங்களில், மணமகனை விட, இரண்டொரு வயது அதிகமாக கூட மணமகள்கள் அமைந்து விடுகின்றனர்.

          வயது வித்தியாச திருமணங்கள் பல, காமவிகாரங்களையும், சில பல <உறவு மயக்க குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. உங்கள் வாழ்க்கையிலும், அதுதான் அரங்ககேறியுள்ளது. நாட்டைக் காப்பாற்றும் பணியில் இருந்த நீங்கள், உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்கள்.

          மாமியார் உங்களுக்கு தூரத்து உறவினர், சகோதரி உறவுமுறையும் கூட. மாமியார் என்பவர், இன்னொரு தாய்க்கு சமம். அந்த உயரிய உறவுமுறையை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள்.

          மாமியார் குளித்துவிட்டு ஆடை மாற்றுவதை தற்செயலாகப் பார்த்துவிட்ட நீங்கள், என்ன செய்திருக்க வேண்டும்? மின்னல் வேகத்தில், அக்காட்சியமைப்பிலிருந்து விலகி, உங்களது அறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சாரி சொல்வதாக நெருங்கி, அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறீர். இதன் மூலம், மாமியாரை வலுக்கட்டாயமாக சேற்றில் தள்ளி, சேற்றில் புரள்வதை ரசிக்க செய்து விட்டீர். நீங்கள், கட்டின மனைவிக்கு மட்டுமல்ல, சொந்த பந்தங்களுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கூட, நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள்.

          தவறுசெய்த, 15 நாட்களுக்கு பின், மனம் உறுத்தி, தனிக்குடித்தனம் போக முடிவெடுத்திருக்கிறீர். இது பற்றி மாமியாரிடமும் பேசியிருக்கிறீர். இந்த பேச்சு கூட, உள்நோக்கத்தோடு கூடிய நாடகம் தான். மாமியாரின் உள்ளக்கிடக்கையை ஆழம் பார்த்திருக்கிறீர். மாமியாரிடமிருந்து நீங்கள் விரும்பின கறுப்பு பதில் கிடைத்திருக்கிறது. கள்ள உறவை, அதே வீட்டிலேயே இருந்து தொடர பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் அத்தை. "மீறி தனிக்குடித்தனம் போனால், தற்கொலை செய்து கொள்வேன்...' என மிரட்டும் அளவிற்கு, கள்ள உறவில் ருசியும் கண்டுவிட்டார் அவர்.

          கர்ப்பிணி மனைவிக்கும், இளமை ஊஞ்சலாடும் அத்தைக்கும் இடையே கிடந்து திண்டாடுவதாய் உங்கள் கடிதம் கூறுகிறது.
இனி, பிரச்னைக்கான தீர்வை யோசிப்போம் சகோதரரே!

          மனைவியிடம் உண்மையைக் கூறினால், உங்களை காறித் துப்புவாள், திருமண பந்தத்திலிருந்து விடுபடயத்தனிப்பாள். பெற்ற தாயே, சக்களத்தியாக வருகிறாளா என்று, தாயாரின் மேல் மண்ணை வாரித் தூற்றுவாள், இது தேவையா?

          அத்தையிடம் அனுமதி கேட்காமல், நீங்களும், உங்களது மனைவியும் தனிக்குடித்தனம் போவது நல்லது. மும்பையில் டேரா அடிக்கும் மாமனாரை, மருத்துவ பிரதிநிதி வேலையிலிருந்து நிற்கச் சொல்லி, வீட்டையும், அவரது மனைவியையும் கவனிக்க நைச்சியமாக ஏற்பாடு செய்யுங்கள்.

          தற்கொலை அச்சுறுத்தல் கண்டு பயப்பட வேண்டாம். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும், 90 சதவீத மக்கள், தற்கொலை செய்து கொள்வதில்லை.

          பெற்ற தாயோ, உடன்பிறந்த சகோதரியோ ஆடை மாற்றுவதை பார்த்திருந்தால், தவறாக நடந்திருப்பீரா? நிச்சயம் மாட்டீர். இந்த தெளிவு, அத்தை விஷயத்தில் ஏன் இல்லை? பொருந்தா காமம், உறவுநிலை மீறிய காமம் அருவருப்பானது. இதை நீங்கள், இனி ஆயுளுக்கும் தவிர்க்க வேண்டும். மாமியாருக்கு மகனாய், மருமகனாய் இருங்கள்! உறவுகளில் புனிதத்தை பேணி காப்போம் சகோதரா!

          நாளை, மகனோ, மகளோ பிறக்கும் வேளை, சேவல் குணத்தை விட்டொழித்து, நல்ல தந்தையாய் மறு அவதாரம் எடுங்கள் சகோதரரே!
***