சித்த மருத்துவ / வைத்தியக் குறிப்புகள்
- பாலியல்
ஆண்களுக்கான குறிப்புகள்
1.
ஆண்மை
சக்தி அதிகரிக்க / தாது விருத்தி அடைய நெல்லிக்காய், முருங்கைக்காய், வாழைப்பூ,
மாதுளம்பழம், அரசம்பழம், அத்திப்பழம், அவித்த பலாக்கொட்டை, ஓரிதழ் தாமரை இலை & கீழாநெல்லி இலை ஆகியவற்றை
தினமும் சாப்பிட்டு வரவும்.
2.
ஆண்மை
சக்தி அதிகரிக்க / உடல் வலிமை பெற பேரிச்சம்பழம், ஒரு ஸ்பூன் தேன் இவற்றை தினமும் பாலில் கலந்து
குடித்து வரவும்.
3.
ஆண்மை
சக்தி அதிகரிக்க / காம உணர்வு ஏற்பட முருங்கைக்கீரை, முருங்கை இலை & முருங்கைப்பூவை
தினமும் சமைத்து சாப்பிட்டு வரவும்.
4.
ஆண்மை
சக்தி அதிகரிக்க / காம உணர்வு ஏற்பட முருங்கைப்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, சுத்தப்படுத்தி 200
மி.லி. பசும்பாலில் (சுடுபால்) போட்டு கொதிக்க வைத்து காய்ச்சவும்;
பின் அதில் கல்கண்டு சேர்த்து 41 நாட்கள்
தினமும் இரவு படுக்கும்முன் குடித்து / சாப்பிட்டு வரவும். இப்படி செய்து வந்தால்
பலன் கிடைக்கும் / தெரியும்.
5.
ஆண்களுக்கு
விந்தணுக்கள் அதிகரிக்க / இந்திரியம் கெட்டியாக ஆலமரத்தின் கொழுந்து இலைகளை
எடுத்து சுத்தப்படுத்தி அதை நன்றாக அரைத்து,
அதில் 5 கிராம் / ஒரு கொட்டைப்பாக்கு அளவு
எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 21 நாட்கள் தினமும்
இரவு படுக்கும்முன் சாப்பிட்டு வரவும். மருந்து சாப்பிடும் நாட்களில் ஆண், பெண் உடலுறவு கொள்ளக்கொடாது. இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
6.
ஆண்களுக்கு
விந்தணுக்கள் அதிகரிக்க / உற்பத்தியாக / வீரியம் பெற ஆலமரத்தின் பழம், கொழுந்து விழுது
இரண்டையும் சமனளவு எடுத்து சுத்தப்படுத்தி அரைத்து எலுமிச்சை பழம் அளவு 21 நாட்கள் தினமும் காலை சாப்பிடுவதற்குமுன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு
வரவும். இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
7.
ஆண்மை
சக்தி அதிகரிக்க அரசமரத்தின் இலை,
பழம், பட்டை, வேர்
& விதை ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்தி இவற்றில் ஏதாவது ஒன்றை
(அல்லது) அனைத்தையும் சேர்த்து இடித்துத் தூளாக்கி பசும்பாலில் கலந்து 21 நாட்கள் தினமும் குடித்து வரவும். இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
.
8.
ஆண்மை
குறைவு / ஆண் மலடு நீங்க ஓரிதழ் தாமரை இலையை எடுத்து சுத்தப்படுத்தி தினமும்
விடியற்காலையில் சிறிதளவு மென்று தின்னவும் (அல்லது) அதை நன்றாக அரைத்து
பசும்பாலில் கலந்து 21 நாட்கள் தினமும் குடித்து வரவும். இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
9.
உடலுறவு
/ தாம்பத்தியம் சுகம் நீண்ட நேரம் கொள்ள செம்பருத்தி பூவை எடுத்து சுத்தப்படுத்தி, நிழலில் உலர்த்தி
இடித்துத் தூளாக்கி அதை பசும்பாலில் கலந்து 21 நாட்கள்
தினமும் இரவு படுக்கும்முன் சாப்பிட்டு வரவும். இப்படி செய்து வந்தால் பலன்
கிடைக்கும்.
10. ஆண்குறி பெரிதாக / பெருக்க கருஞ்சீரக
எண்ணையை ஆண்குறியில் தடவி வரவும்.
பெண்களுக்கான குறிப்புகள்
1.
பெண்களுக்கு
மாதவிடாய் காலத்தில் மாதவிலக்கு வலி குணமாக / சரியாக 30 கிராம் பெருங்காயம்,
6 கிராம் பனவெல்லம் சேர்த்து மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரவும்.
2.
பெண்களுக்கு
மாதவிலக்கு வாயிற்று வலி / பெரும்பாடு நீங்க அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து
சாப்பிட்டு வரவும்.
3.
பெண்களுக்கு
மாதவிலக்கு பிரச்சனைகள் / கோளாறுகள் நீங்க கருந்துளசி இலைசாறை தயார் செய்து
சீரகத்துடன் சேர்த்து கஷாயமாக தினமும் 2 வேளை, வேளைக்கு 2 தேக்கரண்டி
அளவில் சாப்பிட்டு வரவும்.
4.
பெண்களுக்கு
பெரும்பாடு கட்டுப்பட வாழைப்பழத்தை ஏலக்காய் பொடியுடன் சேர்த்து பிசைந்து
சாப்பிட்டு வரவும்.
5.
பெண்களுக்கு
பெரும்பாடு நீங்க பருத்தி இலைசாறை பசும்பாலில் கலந்து குடித்து / சாப்பிட்டு
வரவும்.
6.
பெண்களின்
தொங்கிய / தளர்ந்த / சரிந்த மார்புகள் சரியாக தம் மார்புகளில் விளக்கெண்ணையைத்
தடவி அதனுடன் நல்ல மாதுளம் விதைகளை பொடி
செய்து மார்பின்மீது வைத்து 21 நாட்கள் தினமும் கட்டிவர
வேண்டும். இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும் / தெரியும்.
7.
பெண்களின்
சுருங்கி, தொங்கும் மார்புகள்
பருத்துப் பெருக்க / பெரிதாக அதிமதுரம் மூலிகை மருந்தைத் தேவையான அளவு எடுத்து
அதில் பால்விட்டு அரைத்து அதை மார்புகள்மீது 21 நாட்கள்
தினமும் இரவில் தடவிப் பற்றுப்போட்டு காலையில் கழுவிவர வேண்டும். இப்படி செய்து
வந்தால் பலன் கிடைக்கும்.
8.
பெண்களின்
மார்பு வீக்கம் குறைய வேப்பம்பட்டை,
சுக்கு, மிளகு, கடுக்காய்த்தோல்,
நெல்லிக்காய் ஆகியவற்றை 10 கிராம் எடுத்து, பின் அதை 150 மி.லி.
தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி, பின் அதில் 100 மி.லி. அளவு எடுத்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வரவும். இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
9.
பெண்களுக்கு
கர்ப்பப்பை / கருப்பை பிரச்சனைகள் நீங்க அரசமர கொழுந்து இலைகளை 10-20 எடுத்து அரைத்து
மோரில் கலந்து சாப்பிட்டு வரவும்.
10. பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் /
மலட்டுத்தன்மை நீங்க பருத்தி இலைசாறை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
11. கர்ப்பிணிப்பெண்கள் தம்
கர்ப்பகாலத்தில் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் நன்மை ஆகும்; மேலும் அவர்களுக்குப்
பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும்.
12. கர்ப்பிணிப்பெண்கள் தம்
கர்ப்பகாலத்தில் தினமும் 2 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள
குழந்தைக்கு நன்மை ஆகும்; மேலும் இது குழந்தைக்கு
டானிக்காகவும் இருக்கிறது.
13. கர்ப்பிணிப்பெண்களுக்கு ஆரோக்கியமான
சுகப்பிரசவம் ஆக ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ
& ஏலக்காய் ஆகியவற்றை
சேர்த்து ஒரு மாதம் தினமும் சாப்பிட்டு வரவும்.
14. கர்ப்பிணிப்பெண்களுக்கு கை-கால்
வீக்கம் குறைய நெல்லிக்காய்,
முருங்கைக்காய் & முள்ளங்கி ஆகியவற்றை
உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
15. கர்ப்பிணிப்பெண்கள் தம்
கர்ப்பகாலத்தில் அன்னாசிப்பழம்,
வெல்லம் & கருஞ்சீரகத்தை சாப்பிட்டால்
கருச்சிதைவு ஏற்படும். அதனால் கவனமாக இருக்கவும்.
16. பிரசவமான பெண்கள் தம் வயிற்றில் உள்ள
நச்சுநீரை வெளியேற்ற 12 கிராம் மஞ்சள்தூளை 150 மி.லி.
தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி குடித்து வரவும். இப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
17. பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க
முருங்கைக்கீரை பொரியல் செய்து சாப்பிட்டு வரவும்.
18. பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடவும் (அல்லது) சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி
அதனுடன் சமனளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
19. பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க
கேழ்வரகுமாவு, எள்ளுடன் சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வரவும்.
இப்படி செய்து வந்தால், தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்குத்
தேவையான தாய்ப்பால் சுரக்கும்.
20. பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க
ஓரிதழ் தாமரை இலைகளை சுத்தப்படுத்தி சிறிதளவு அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு
எடுத்து மோரில் (பசும்பால்) கலந்து சாப்பிட்டு வரவும்.
21. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை
நிறுத்த அரைக்கீரையை சமைத்து சாப்பிடவும்.
22. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு
மார்பில் பால் கட்டிவிட்டால்,
மல்லிகைப் பூக்களை மார்பில் வைத்துக் கட்டினால் கட்டியப் பால்
கரைந்துவிடும்.
23. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மார்புக்காம்பில்
ஏற்படும் வெடிப்பு குணமாக, வெங்காயத்தை நெருப்பில் சுட்டு பொடியாக்கி சுத்தமான நீரில் கலந்து அதில்
மெல்லியத்துணியை நனைத்து, அதை மார்புக்காம்பு வெடிப்பின்மீது
தினமும் தடவிப் போட்டு வரவும்.
24. தாயிடம் பால் குடிக்காத
குழந்தைகளுக்கு துளசி இலையும்,
அதிமதுரமும் சமனளவு எடுத்து இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துத்
தாயின் மார்புக்காம்பில் தடவின பிறகு, குழந்தையைப் பால்
குடிக்க வைத்தால் நன்றாகப் பால் குடிக்கும் / சாப்பிடும்.
25. பெண்கள் கர்ப்பமாகாமல் இருக்க உடலுறவு
கொண்டபின்,
ஒரு ஸ்பூன் எள் / எள் மிட்டாய் சாப்பிடவும்.
26. பெண்கள் கர்ப்பமாகாமல் இருக்க
அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம் & வெல்லம் சாப்பிடவும்.
குறிப்பு
1.
சித்த
மருந்துகள் அனைத்தும் அந்தந்த உள்ள நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
2.
சித்த
மருந்துகள் / மூலிகைகளை நன்றாகப் பொடியாகி சாப்பிட்டால் முழுப்பலன் கிடைக்கும்.
3.
சித்த
மருந்துகளை தேவைக்குத் தகுந்தபடி தேனில் கலந்து சாப்பிடவும் (அல்லது) சித்த மருந்துகள்
சாப்பிட்டபின் வெந்நீர் குடிக்கவும்.